CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, November 21, 2008

பெண்கள் சிகரெட் பிடிப்பது தவறா?

``ஆண்கள் சிகரெட் பிடிக்கும்போது நாங்களும் சிகரெட் பிடித்தால் என்ன தவறு?'' என்று பல பெண்கள் கேட்பதை பார்த்திருக்கிறேன்.

ஆண்களுக்கு சரிநிகர்சமானமாக பெண்கள் வாழவேண்டும் என்பது மிகச்சரியானதுதான். ஆனால் அதே சமயத்தில், கிணற்றில் ஒரு ஆண் விழப்போனால் நானும் அதையே செய்வேன் என்று சொல்வது சரியாக இருக்குமா? யார் தொட்டாலும் நெருப்பு சுடத்தான் செய்யும். அதுபோலத்தானே சிகரெட் பழக்கமும்.

உடல் நலத்தை பாதிக்கும் ஒரு பழக்கம் தன்னிடத்தில் இல்லாதபோது, அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அதைத் தக்கவைத்துக்கொள்வதுதானே சரி ?